சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக நடிக்க உள்ளாரா குஷ்பு?! தலைவர் 168 மாஸ் அப்டேட்!

Default Image
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அவரது 168 வது திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் குஷ்பூ எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் குஷ்பூ வில்லி கதாபாத்திரம் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்