சிறுத்தை சிவா இயக்கத்தில் 3 கதாநாயகிகளுடன் சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
- சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து அவரது 168வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
- இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் தயாராகி விட்டது. அதனை தொடர்ந்து அவரது 168 வது திரைப்படதிற்கான பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் 3 கதாநாயகி நடிகைகள் நடிக்க உள்ளனர். நடிகை மீனா, குஷ்பூ மற்றும் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மீனா அல்லது குஷ்பூ இருப்பர்கள் என கூறப்படுகிறது.
இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்பட ஷூட்டிங் ராமோஜி பிலிம் சிட்டியில் செட் போட்டு தொடங்க உள்ளது. விரைவில் அடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.