தேவர் மகனுக்கு பிறகு மீண்டும் இணைந்த மெகா கூட்டணி! தலைவன் இருக்கிறான் அப்டேட்!
உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்தாலும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இதுபோக லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவன் இருக்கிறான் எனும் படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அதற்கடுத்த அப்டேட்டாக தலைவன் இருக்கிறான் படம் பற்றி அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் – வடிவேலு கூட்டணியில் சிங்காரவேலன் தேவர்மகன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.