தலைவலி நீங்க சில எளிய மருத்துவ முறைகள்…!!!
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் ஒரு நோய் தலைவலி தான். ஆனால் இதற்கு தீர்வு தெரியாமல் அலைமோதும் மக்கள் அதிகமானோர்.
சில எளிய முறைகள் :
- சூடான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து சிறிது உப்பு போட்டு பருக வேண்டும்.
- புதினாக் கீரையின் சாற்றை நெற்றிப் பொட்டில் தடவலாம்.
- சிறிதளவு சீரகம், ஒரே ஒரு கிராம்பு, 2 மிளகு இவற்றை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம்.
- குப்பைமேனி இலையை சுத்தம் செய்து தூளாக்கி, ஒருசிட்டிகை எடுத்துபொடி போடுவது போல் மூக்கிலிட்டு நசியவிட கடுமையான தலைவலி தீரும்.
- மூன்று கிராம் மிளகுபொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட தலைபாரம் நீங்கும்.