எல்லா தர்பாரிலும் ரஜினியே தலைவர் – தமிழில் ட்வீட் செய்த சச்சின்
- ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் தமிழில் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வழக்கமாக கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை ஹர்பஜன் சிங் தான் தமிழில் ட்வீட் செய்து அசத்துவார்.இதற்காகவே இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இவரை தொடர்ந்து தமிழில் விக்ரம் நடித்து வரும் படத்தில் அறிமுகமாக உள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அதன் அறிவிப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார்.இவரது ட்வீட் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69 -வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இவருக்கு பல துறைகளில் உள்ளவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rajinikanth Sir.
Your onscreen style and offscreen humility make you the ‘Thalaiva’ in every ‘Darbar’. pic.twitter.com/cIYZLJcjk9
— Sachin Tendulkar (@sachin_rt) December 12, 2019
இந்த வகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rajinikanth Sir. திரையில் ஸ்டைலாகவும்,திரைக்கு பின்னர் எளிமையாகவும் இருக்கும் நீங்கள் ஒவ்வொரு தர்பாரிலும் தலைவராக திகழ்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.