இந்திய அணி வெற்றியை வெறித்தனமாக கத்தி கொண்டாடிய தல தோனி மகள்!வைரலாகும் வீடியோ!

Default Image

உலகக்கோப்பையில் 22-வது  லீக் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான்  அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் சேர்த்தனர்.
மழைகாரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தோனியின் ஆட்டத்தை பார்க்க அவரது மகள் ஜிவாவும் வழக்கம் போல நேற்று முன் தினம் நடந்த போட்டியில் கலந்துகொண்டார்.போட்டி நடக்கும் போது மழை பெய்ததால் அப்போது ஜிவா ரெயின்கோட் போட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டது.
https://www.instagram.com/p/Byx_NZDnu9A/?utm_source=ig_web_copy_link
அதன் பின்னர் இந்திய அணி போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ரிஷப்பண்ட் , ஜிவா இருவரும் உற்சாகமாக கத்தும் வீடியோவை ரிஷப்பண்ட்  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ ரசிகர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன் ஐபிஎல் தொடரின் போது ஜிவா,ரிஷப்பண்ட்டிற்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக  பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்