தல அஜித்தின் வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தல அஜித் தனது சினிமா வாழ்க்கையில் பல ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார். அந்த வகையில் தல அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்த படங்கள் தான் ‘வாலி’ மற்றும் வரலாறு.
எஸ். ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான வாலி படத்தின் தல அஜித் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார். கே. எஸ். ரவிகுமார் இயக்கிய வரலாறு படத்தில் தந்தை மற்றும் இரட்டை மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்து சினிமாவில் தனக்கென்ற இடத்தை தக்க வைத்தார். இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை போனி கபூரின் உதவியாளரான ராகுல் பெரிய தொகைக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியிலும் தல அஜித் விரைவில் பட்டய கிளப்புவார் என்பதில் சந்தேகம் இல்லை.
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…