தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவரின்பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபியை பல பிரபலங்கள் இணைந்து வெளியிட இருந்தனர். ஆனால் CDP யை வெளியிடயிருந்த பிரபலங்களில் ஒருவரான ஆதவ் கண்ணதாசனை தொடர்பு கொண்டு கொரோனா தொற்று பரவி கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இதெல்லாம் வேண்டாம் என்று அஜித் சார்பாக அவரது அலுவலகத்தில் இருந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனால் அவரும் டிபியை வெளியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
அஜித்தின் வேண்டுகோளுக்கிணங்க வெளியிடயிருந்த அனைவரும் பின்வாங்கிய நிலையில், சில பிரபலங்கள் அஜித் அவர்களின் காமன் டிபியை தங்களது ப்ரோபைலில் வைத்து ரசிகர்களை குஷியாக்கினர் .மேலும் அதனுடன் அஜித் ரசிகர்கள் #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கிய 24 மணி நேரத்தில் 5மில்லியன் டுவிட்களை செய்து டுவிட்டரில் நம்பர் 1 இடத்தை பிடித்தது .இந்நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களால் தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மாஷ்அப் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த செம்ம மாஸ்ஸான மாஷ்அப் வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றார்கள்.
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…