கொரோனாவை விரட்ட தல அஜித்தின் ஐடியா! குவியும் பாராட்டுகள்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை ஒழிக்க தல அஜித்தின் தலைமையில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல மாநிலங்களில் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் கிருமிநாசினி தெளிப்பது என்பது சாத்தியமில்லாத காரியம். இதற்கு முடிவாக தல அஜித் ஐடியா ஒன்றை கூறியுள்ளதாக டாக்டர் கார்த்திகேயன் பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா குழுவினர் அஜித் தலைமையில் உருவாக்கிய ட்ரோன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள சிவப்பு மண்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவும், இந்த ட்ரோன் அரை மணி நேரத்தில் 16 லிட்டர் வரையான கிருமிநாசினியை தெளிக்கும் என்றும் அஜித் அவர்கள் கார்த்திக்கேயனிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசு ஒரு சில இடங்களில் ட்ரோன் பயன்படுத்தி கிருமிநாசினியை தெளித்து வருவதாக கூறப்படுகிறது. தல அஜித்தின் இந்த செயலுக்கு ரசிகர்கள் உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.