அடேங்கப்பா..! தல அஜித் 60-வது திரைப்படத்தின் பெயர் இதுவா..!
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் , இப்படத்தை நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இப்படத்திற்கு ரசிகர்கள் தல 60 என பெயரிட்டு வந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு “வலிமை ” என படக்குழுவினர் பெயர் வைத்து உள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
மேலும் அஜித்துடன் “என்னை அறிந்தால்” ,” விசுவாசம்” ஆகிய 2 படத்தில் மகளாக நடித்த அனிகா இப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.