தன்னைக் காண வந்த ரசிகரை அரவணைத்து புகைப்படம் எடுத்த தல அஜித்.! வைரலாகும் வீடியோ.!
தன்னைக் காண வந்த ரசிகரை அரவணைத்து நடிகர் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். அவ்வபோது அஜித் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியீட இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாளுக்கு சென்று அஜித் பார்வையிட்டார். அப்போது அங்கு திரண்ட அஜித்தின் ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் தன்னைக் காண வந்த ரசிகரை அன்போடு அரவணைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இந்த மனம் இருப்பதால் தான் அவரை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Latest video of Thala #Ajith sir.
| Video: karthi | #Valimai | #Ajithkumar | #BikeRide | pic.twitter.com/djQ6WnlxAe
— Ajith | Valimai | (@ajithFC) September 19, 2021