அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியல்.
தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே திருவிழாக போலத்தான் இருக்கும். மேலும் நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்களை குறித்து பார்ப்போம். இதில் முதலிடத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படம் தான் அஜித்தின் முதல் 100 கோடி படம், உலகம் முழுவது இந்த படம் 140 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்.
இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டு வெளியான ஆரம்பம் திரைப்படம் 124 கோடி வசூல் செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படம் 130 கோடி வசூல் செய்துள்ளது. நான்காவது இடத்தில கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படம் 115 கோடி வசூல் செய்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் அதே 2015 ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் 150 கோடி வசூல் செய்துள்ளது. ஆறாவது இடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான விவேகம் திரைப்படம் 130 கோடி வசூல் செய்துள்ளது. ஏழாவது இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் அஜித்திற்கு மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றே கூறலாம், ஆம் உலகளவில் 200 கோடி வசூலை கடந்து அஜித்திற்கு முதன் முதலாக 200 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்தது. அடுத்ததாக எட்டாவது இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் வலிமை படம் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…