தீபாவளி ரேஸில் போலீஸாக களமிறங்கும் தல அஜித்! தயாரிப்பாளர் கூறிய அதிரடி அப்டேட்!
- தல அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் வலிமை.
- இப்பட ஷூட்டிங் வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தல அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை போட்டு மாதங்கள் ஆகிவிட்டன.
இந்நிலையில் இப்பட ஷூட்டிங் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர் வெளியிட்டு உள்ளார். ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய தயாரிப்பாளர் போனிகபூர் பேசுகையில், வலிமை படத்தில் தல அஜித் போலீசாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13இல் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அடுத்தடுத்த அதிரடி அப்டேட்களை கொடுத்து தல ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டார்.