தல அஜித்தின் வலிமை பட பூஜை! எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் உள்ளே!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் தல அஜீத் நடிக்க உள்ளார். இந்த படம் தான் தல அஜித்திடம் வினோத் முதலில் கூறிய ஆக்சன் படமாகும். நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். வலிமை என இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதில் இருந்து சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். விரைவில் படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.