இன்னும் காலதாமதமாகும் தல60! எப்போ சார் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவீங்க?!
நேர்கொண்டபார்வை படத்தை அடுத்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார். இந்த படம் வினோத்தின் சொந்த கதை. இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மையமாக கொண்டு படமாக்கப்பட உள்ளது என தகவல் ஏற்கனவே வெளியானது.
இப்பட சூட்டிங் ஆகஸ்டில் ஆரம்பித்து, 2020 கோடை விடுமுறையில் வெளியாகும் என முதலில் கூறப்பட்டிருந்தது ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. இன்னும் திரைக்கதை வேலைகள் மீதம் இருப்பதாலும் படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகளும் இன்னும் இருப்பதாலும் படத்தின் சூட்டிங் டிசம்பர் வரை தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. இதனால் இந்த வருட கோடை விடுமுறைக்கு தல60 திரைப்படம் வரும் என எதிர்பார்க்க முடியாது.
அனேகமாக பட ரிலீஸ் 2020 ஆகஸ்ட் மாதம் வரை தள்ளி போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சூட்டிங் ஆரம்பித்தால் தான் எப்போது வெளியே வரும் என தெரியவரும்.