மீண்டும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தனது பழைய தோற்றத்திற்கு மாறிய தல அஜித்!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்டபார்வை திரைப்படம் வெளியானது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும் வசூலிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் கார் பந்தய வீரராகவும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து வருகிறார்.
அவர் தற்போது மீண்டும் தனது கருப்பு தலை முடியுடன் கிளீன் ஷேவ் செய்து ;லவ்வர்பாய் தோற்றத்திற்கு மாறியுள்ளார் இந்த தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.