வடலூரில் ஜோதியாக வள்ளலார்..அருட்பெருந்ஜோதியாக அருட்காட்சி..!பக்தர்கள் பரவசம்
வடலூர்: 149வது தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு 7 திரைகளும் விலக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இறைவன் எங்கும் நிறைந்து இருப்பவன் இத்தைய கருத்துக்கு சான்றாக தான் அவன் ஒளி வடிவானவன் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவி ஏழை ,எளிய மக்களின் பசியை போக்கி வருகிறார் வள்ளலார் பயிற்று பசியைபோக்க தருமச்சாலை அமைத்ததோடு மட்டுமல்லாமல் அறிவுபசியையும் போக்கியவர். அன்று முதல் இன்று வரை தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.அவரருடைய வழிகாட்டுதல்கள் எல்லாம் அளப்பரியவை.
“வாடிய பயிரை கண்டபோதேல்லாம் வாடினேன்” என்ற இளகிய மனம்படைத்த அந்த மகானுக்கு மாதந்தோறும் வருகின்ற பூசநட்சத்திரத்தன்று ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும் அவர் ஜோதியாகவே காட்சி தருவதாக ஜதீகம் இவ்விழாவானது தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு 149வது தைப்பூச திருவிழா ஆனது (வெள்ளிக்கிழமை)யான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இன்று (சனிக்கிழமை) காலை ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதில் காலை 6 மணி , 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என 6 காலங்களுக்கு 7 திரைகளை நீக்கி காண்பதற்கே அரியவகையான ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பலபகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் இன்று திரள்வார்கள். அங்கு வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு தேவையான தங்குமிட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது