விரைவில் கொரோனா இல்லாத நாடாக தாய்லாந்து மாறும்!
விரைவில் கொரோனா இல்லாத நாடாக தாய்லாந்து மாறும்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் 17-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை.
இதுவரை அங்கு 3,125 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, விரைவில் கொரோனா இல்லாத நாடாக தாய்லாந்து மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.