தை மகள் வந்தாள்! மகிழ்ச்சியில் சினேகா – பிரசன்னா!

- சினேகா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பதிவில், தை மகள் வந்தாள் என்று தனது மகளின் வருகையைக் குறிப்பிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சினேகா, பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் பட்டாசு படத்தில் நடிக்கும் போதே அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. சினேகா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பதிவில், தை மகள் வந்தாள் என்று தனது மகளின் வருகையைக் குறிப்பிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025