சிறப்பாக செயல்பட்டு வரும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவிற்கான சோதனை விகிதம் மிகக் குறைவு என்று WHO தலைமை விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வீடியோ மாநாட்டின் மூலம் பேசுகையில், கொரோனா தொற்று பரவலை சரிப்பார்க்கவே ஊரடங்கு ஒரு தற்காலிக நடவடிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் வைரஸை சமாளிக்க தேவையான அமைப்பை அரசாங்கம் அமைப்பதற்கான நேரத்தை வாங்குவதும் ஒரு நோக்கமாகும் என்று கூறினார்.
மேலும் சிறப்பாக செயல்பட்டு ஜெர்மனி, தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில், இந்தியா மிக குறைந்த சோதனை விகிதங்களையே கொண்டுள்ளது. போதுமான சோதனை இல்லாமல் வைரஸை எதிர்த்து போராடுவது, கண்மூடித்தனமாக தீயை எதிர்த்து போராடுவது போன்றது என்று தெரிவித்தார்.
அதாவது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சோதனை விகிதம் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருந்தால் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.89% ஆக உள்ளது. எனவே எங்களுக்கான வரையறுகளின் படி, ஒவ்வொரு பொது சுகாதார துறையும் ஒரு லட்சம் அல்லது ஒரு மில்லியனுக்கு அதிகமான சோதனை விகிதம் என்ன என்பதும் , கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சோதனை விகிதம் என்ன என்பதை வரையறுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், ஐ. சி. யூக்கள், மற்றும் ஆக்ஸிஜன் பொருட்கள் கிடைப்பதை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுவாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…