டெஸ்ட் உடையில் மாற்றமா? என்ன செய்ய போகிறது ஐசிசி.
- டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது.
- வருகின்ற ஆஷஸ் தொடரில் இருந்து இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும்
டெஸ்ட் போட்டிகளில் அவ்வபோது பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஐசிசி நிர்வாகம் பல யுக்திகளை மேற்கொண்டு வருகிறது.
அவற்றில் சில டெஸ்ட் போட்டிகளில் பகலிரவு ஆட்டம், பிங்க் பந்து, மற்றும் வீரர்கள் பகலிரவு ஆட்டத்தில் டீ மற்றும் இரவு உணவை அருந்திவிட்டு ஆடுவார்கள் என்று விதிமுறைகளையும் கொண்டு வந்தது.
இந்நிலையில், தற்பொழுது டெஸ்ட் போட்டிக்கான உடையில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்களை ஜெர்சி பின்னால் போட்டுக் கொள்வது போல டெஸ்ட் போட்டிகளிலும் ஜெர்சி பின்னால் எண்கள் போட்டுகொள்ளுமாறு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து ஐசிசி நிர்வாகம் கூறுகையில், வருகின்ற ஆஷஸ் தொடரில் இருந்து இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும், இது ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டியின் ஆர்வத்தை எடுத்துச் செல்லும் நோக்கத்திலேயே செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.