மின்சார கார் உற்பத்தி மூலம் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் உச்சத்தை எட்டியுள்ளது…!

Default Image

டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை விற்பனை செய்ததாகவும்,இதனால்,10.3 பில்லியன் டாலர் சம்பாதித்து வருவாயை உயர்த்தியதாக தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைந்த நிலையில்,பல நிறுவனங்கள் தங்கள் வருவாயை கணக்கிட்டு வருகின்றன.அதன் வரிசையில்,அமெரிக்க மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது வருவாயை கணக்கிட்டு கூறியுள்ளது.

அதன்படி டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை 10.3 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்ததாகவும்,இதனால் மொத்த வருமானம் 438 மில்லியன் டாலர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த மொத்த வருவாயை விட 74 சதவீதம் வளர்ச்சியாகும்.

இதைப் பற்றி டெஸ்லா நிறுவனம் கூறுகையில்,”எங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அறிமுகம் மற்றும் மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகியவற்றின் காரணமாக,எங்கள் சராசரி செலவு முதல் காலாண்டில், ஒரு வாகனத்திற்கு 38,000 டாலர் என்ற அளவில் குறைந்தது.

இருப்பினும்,பருவநிலை மாற்றம்,உறுதியற்ற தன்மை உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியிலும்,நாங்கள் எங்கள் மிக உயர்ந்த மின்சார வாகனத்தை தயாரித்து விற்பனை செய்துள்ளோம்.

தற்போது நாங்கள் தயாரித்துள்ள மாடல் 3 உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிரீமியம் செடான் ஆகும்.ஏனெனில்,நீண்டகாலமாக விற்பனையின் முன்னிலையில் உள்ள 3 சீரிஸ் மற்றும் ஈக்ளாஸ் போன்ற பிற நிறுவனங்களின் கார்களை விட எங்களுடைய மாடல் 3 அதிகமாக விற்பனையாகியுள்ளது.

இதனால்,உலகளவில் எந்த வகையிலும் அதிகம் விற்பனையாகின்ற வாகனமாகவும் மாற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்”,என்று டெஸ்லா நிறுவனம் கூறியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்