ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.
ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இவர்களை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசு படைகளும், தலிபான் பயங்கரவாதிகளும், பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஆப்கான் அரசு, நேற்று நூற்றுக்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்திருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஜலாலாபாத் நகரில் உள்ள சிறைச்சாலை வாசலுக்கு அருகே நேற்று வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை பயங்கரவாதிகள் வெடிக்கச்செய்தனர். இந்த சம்பவத்தால், சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது.
இதனையடுத்து, பயங்கர ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சிறைச்சாலையில் காவலுக்கு இருந்து பாதுகாப்பு படையினர் மீதும், சிறைக்கைதிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் மற்றும் சிறைக்கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…