பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நான்கு தீவிரவாதிகள் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தைத் நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
நான்கு பயங்கரவாதிகளில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் கட்டிடத்திற்குள் உள்ளதாகவும், கட்டிடத்தின் பிரதான வாயிலில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கட்டிடத்தைத் தாக்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு காவலர் ஆகியோர் அடங்குவர். அலுவலகத்தின் சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…