பயங்கரவாதிகள் தாக்குதலால் பர்கினோ பாசோவில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் பர்கினோ பாசோ நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதலே போகோ ஹரம், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தாலும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியின் காட்டு பகுதியில் சிலர் மேய்ச்சலை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து, குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதி மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.