ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்! 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி!

ஜம்மு – காஷ்மீரில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம். இந்த தாக்குதலில் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற  தாக்குதலில் சிஆர்பிஎஃப்  வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  மேலும், மூன்று சிஆர்பிஎஃப் பணியாளர்களும் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் காவல்துறையினர் கூறுகையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மதியம் 12:50 மணிக்கு ஸ்ரீநகர் நகரின் புறநகரில் உள்ள பாம்பூர் புறவழிச்சாலைக்கு அருகே தோப்பாகி சூடு நடத்தியதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த மூன்று சிஆர்பிஎஃப் பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும், சம்பவ இடம் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்