நேற்று அங்குள்ள நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவன் கையில் கத்தியுடன் நுழைந்தான்.பின், அவன் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல் அதிரடி படையினர் அங்கு மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால், அதற்குள் அவனது தாக்குதலில் 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அவன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியபோதும், காவல்துறையால் கைது செய்யப்பட்டபோதும் மத ரீதியிலான கோஷம் போட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. காவலர்கள் சுட்டதில் படுகாயம் அடைந்த பயங்கரவாதி, அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…