பயங்கரம்…பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கின்மீது குண்டு வீச்சு – 1000-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன?..!
உக்ரைன் மீது கடந்த சில நாட்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,முக்கிய நகரங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.அந்த வகையில்,உக்ரைனின் தெற்கு பகுதியான மரியபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன.
இதனையடுத்து,அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதன்காரணமாக,அப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு:
குறிப்பாக குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில் மரியபோல் நகரில் ரஷ்ய விமானப்படைகள் கடும் தாக்குதல் நடத்தியதாக அதன் நகர துணைமேயர் தெரிவித்துள்ளார்.
1000-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களின் கதி என்ன?
இந்நிலையில்,உக்ரைனில் மரியபோல் நகரில் 1000-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கில் ரஷ்யா குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால்,இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
உணவு வாங்கும்போது நேர்ந்த சோகம்:
அதைபோல்,உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிகிவ் பகுதியில் உணவு வாங்க பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்த பகுதியில் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.