#Shocking:பெரும் சோகம்…ஹோட்டலில் பயங்கர வெடி விபத்து- 22 பேர் பலி;70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Default Image

கியூபாவின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பிரபல சொகுசு ஹோட்டலின் முகப்பில் இயற்கை எரிவாயு கசிவு காரணமாக ஒரு சக்திவாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் சிக்கி,ஒரு குழந்தை உட்பட சுமார் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,இந்த வெடி விபத்தில் சுமார் 74 பேர் படுகாயமடைந்துள்ளதாக கியூபா சுகாதார அமைச்சின் மருத்துவமனை சேவைகளின் தலைவர் டாக்டர் ஜூலியோ குர்ரா இஸ்கியர்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,விரைவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பேசிய கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல்,”இது வெடிகுண்டு தாக்குதல் இல்லை,வாயு கசிவால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.இது மிகவும் துரதிர்ஷ்டவசமான விபத்து” என்றார்.

இதனிடையே,வெடி விபத்து நடைபெற்ற ஹவானாவின் 96 அறைகள் கொண்ட சரடோகா ஹோட்டலில் சுற்றுலாப் பயணிகள் யாரும் தங்கவில்லை எனவும்,அது புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும்,ஆனால் தொழிலாளர்கள் உள்ளே இருந்தனர் என்றும் ஹவானா கவர்னர் ரெனால்டோ கார்சியா ஜபாடா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஹோட்டலுக்கு அருகிலுள்ள கட்டிடங்களில் உள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹோட்டலுக்கு இயற்கை எரிவாயு சப்ளை செய்து கொண்டிருந்த டிரக் வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கியூபா அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.ஆனால் எரிவாயு எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை.

மேலும்,தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.எனினும்,குண்டுவெடிப்புக்கான காரணத்தை காவல்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சிதைந்து போன தனது முக்கிய சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க கியூபா போராடி வரும் நிலையில், வருகின்ற செவ்வாய்கிழமை இந்த ஹோட்டல் திறக்கப்பட உள்ள சூழலில்,இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

96 அறைகள் கொண்ட நியோ-கிளாசிக்கல் பாணி ஹோட்டல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் மறுவடிவமைக்கப்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரபலங்களைப் பார்வையிடும் சுற்றுலா இடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்