மெக்சிகோவில் மேம்பாலம் இடிந்ததால் கீழே விழுந்து மெட்ரோ ரயில் நொறுங்கியது.இதில் பயணித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மெக்சிகோவின்,ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12 வது மெட்ரோ பாதையில் உள்ள மேம்பாலம் நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தது.அப்போது அப்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலானது மேம்பாலதுடன் சேர்ந்து கீழே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார்கள் மீது விழுந்து நொறுங்கியது.
இதனைக் கேள்விப்பட்ட மீட்புப்படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இருப்பினும் இந்த கோர விபத்தில் சிக்கி கார்களில் இருந்த 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த மெக்சிகோவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாசிலா இபாட்,மேம்பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றுக் கூறியுள்ளார்.
இருப்பினும்,இந்த மெட்ரோ ரயில் மேம்பாலமானது மாசிலா இபாட் மெக்சிகோவின் மேயராக இருந்தபோது கட்டப்பட்டதாகும் என்பது குறிபிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…