நடிகர் மகேஷ் பாபுவின் ‘SarkaruVaariPaata ‘ படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வலைத்தளங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது .
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நேற்றைய தினம் தனது தந்தையான பிரபல நடிகரான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டிலை போஸ்ட்ருடன் வெளியிட்டிருந்ததார் . “SarkaruVaariPaata” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ். எஸ். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிஎஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தை மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான GMB என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் ப்ளஸ் தயாரிக்கிறது. காதில் கடுக்கன் மற்றும் கழுத்தில் ஒரு ரூபாய் துட்டுடன் கூடிய அந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.
இந்த நிலையில் தற்போது இந்த பீரீ லுக் போஸ்ட்ர் 3 மில்லியன் டுவிட்களை செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் 24 மணி நேரத்தில் அதிகமாக லைக்குகளை குவித்த பீரி லுக் போஸ்ட்ர் என்ற பெருமையையும், அதிகமாக ரீடுவிட் செய்யப்பட்ட பீரீ லுக் என்ற பெருமையையும் , அதிகமாக பயன்படுத்தப்பட்ட டைட்டில் டேக் என்பதையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…