தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது – அப்போலோ மருத்துவமனை அறிக்கை!
ஹைதராபாத் கேபிள் பாலத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்ட நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிவிப்பு.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல் இருந்த தரம் தேஜ் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில், பைக் விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்-யின் உடல்நிலை சீராக உள்ளது என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சாய் தரம் தேஜ்-யின் முக்கிய உடல் உறுப்புக்கள் சிறப்பாக வேலை செய்வதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் சாய்யின் உடல்நிலைக்கு குறித்த விவரம் நாளை வெளியிடப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.