விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொள்ள சொல்வது தற்கொலைக்கு சமம் – ஜி.வி.பிரகாஷ்

Published by
லீனா

மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள செல்வது தற்கொலைக்குச் சமம்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள செல்வது தற்கொலைக்குச் சமம். உரிமைகளுக்காக போராடுவது ஜனநாயகம்தான். அவர்களை ‘ஏர்முனை கடவுள்’ என்று அழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்.’ என்று பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

36 seconds ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

55 mins ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

1 hour ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

1 hour ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

1 hour ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

2 hours ago