“வாட்ஸ் அப்ஐ டெலீட் செய்துவிடுங்கள்” இதுதான் காரணம்.. டெலிகிராம் ஓபன் டாக்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி பயனாளர்களின் சுய விவரங்கள், தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரவலாக எழுந்துள்ளது. இந்த சூழலில்தான் மற்றொரு சாட்டிங் ஆப் ஆன டெலிகிராமின் நிறுவனர் வாட்ஸ்அப் செயலியை டெலிட் செய்யுமாறு பயனாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து டெலெக்ராம் நிறுவனம் கூறுகையில், “வாட்ஸ்அப் செயலி மூலம் உங்களது வாட்ஸ்அப் புகைப்படங்கள் மட்டுமின்றி உங்களது ஸ்மார்ட்போன் கேலரியில் உள்ள புகைப்படங்களையும் திருட முடியும். வாட்ஸ் ஆப் பயனார்களே , நீங்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கீர்கள். வாட்ஸ்அப் என்னும் ஒற்றுவேலை செய்யும் செயலியை உடனடியாக டெலிட் செய்யுங்கள்” என டெலிகிராமின் 3,35,000 பயனாளர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
சர்வதேச அளவில் வாட்ஸ்அப் செயலியை 1.6 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், வளரும் டெலிகிராம் செயலியை 200 மில்லியன் பேர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.