வாட்ஸ் அப்-ஐ பங்கமாக கலாய்த்த டெலிகிராம்.. இணையத்தில் வைரலாகும் GIF!
டெலிகிராம் நிறுவனம், வாட்ஸ்அப்-ன் புதிய Privacy Policy-ஐ கலாய்க்கும் விதமாக பிரபல coffin box மீமை வைத்து ஒரு GIF-ஆக செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் எடுக்காது என்று அந்நிறுர்வனம் தெரிவித்துள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டிற்காக பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு மாறாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்தநிலையில், வாட்ஸ்அப்-ன் புதிய Privacy Policy-ஐ டெலிகிராம் நிறுவனம், பங்கமாக கலாய்த்தது. அந்தவகையில் டெலிகிராம் நிறுவனம், வாட்ஸ்அப்-ன் புதிய Privacy Policy-ஐ கலாய்க்கும் விதமாக பிரபல coffin box மீமை வைத்து ஒரு GIF-ஆக செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புதிய Privacy Policy, வணிகரீதியான கணக்குகள் மட்டும் தான், தனி நபர் கணக்குகளை பாதிக்காது எனவும், தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் என வாட்ஸ்அப் விளக்கமளித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
— Telegram Messenger (@telegram) January 10, 2021