வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓம் பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களது செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செய்திகள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் இந்த முடக்கம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்புக் கோரியிருந்தார். இந்நிலையில் 6 மணி நேரம் முடக்கத்தான் காரணமாக மார்க்கத்திற்கு சுமார் ரூ.45,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராக குறைந்ததாகவும், மிகப்பெரிய செயலிழப்பால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட வருவாய் கிட்டத்தட்ட $ 6 பில்லியனுக்கும் அதிகமாக சரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எங்களது குழுவின் உழைப்பை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. சுமார் 7 கோடி புதிய பயனர்களை பெற்றுள்ளோம். அதிக பயனர்களை ஒரே நேரத்தில் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் செயலியின் செயல்பாட்டில் வேகம் குறைந்து காணப்பட்டது என்று கூறினார்.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…