கடந்த 72 மணி நேரத்தில் டெலிகிராம் மாறிய 2.5 கோடி பயனாளர் .?
வாட்ஸ்அப் அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து பலர் அந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, மாற்று செயல்களான சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலியாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் புதியதாக டெலிகிராமில் இணைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.