தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மக்கள் அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பல்வேறு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ள நிவாரண நிதி திரட்டி வரக்கூடிய நிலையில், திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வரும் நிலையில் சிரஞ்சீவியும் மகேஷ்பாபுவும் ஒரு கோடி ரூபாயை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். இதுதவிர பல்வேறு நடிகர்களும் லட்சக்கணக்கில் தங்களால் முடிந்த நிதிகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…