ரூ .12 க்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கிமீ செல்லும் எலக்ட்ரிக் மொபைட்

Published by
Castro Murugan

புனேவைச் சேர்ந்த  ஸ்டார்ட்அப் நிறுவனமான  டெக்கோ எலெக்ட்ரா “சாதி” என்ற புதிய  எலக்ட்ரிக் மொபைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாகனங்களின் பரிமாற்றத்தில்  நாளுக்குநாள் புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன. இந்நிலையில் புனேவை சேர்ந்த புதிய நிறுவனமான டெக்கோ எலெக்ட்ரா “சாதி” என்ற புதிய எலக்ட்ரிக் மொபைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கி.மீ. இதில் வரை செல்ழும் திறன் கொண்டது. 1.5 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, டெக்கோ எலெக்ட்ரா கூறுகையில், மொபட் 60 கி.மீ.க்கு வெறும் ரூ.12 இல் செல்ல முடியும். இதில் வாகனம் திருடப்படுவதை தடுக்கும் அலாரம், வேகமாக சார்ஜ் ஏறும் வசதி மற்றும் 3 வருடத்திற்கான வாரண்ட்டி போன்ற சிறப்பம்சங்களை வழங்குகிறது. இதன் விலை ரூ. 57,697 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து சந்தைக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக  புனேவில் வலம் வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் வாகனங்களின் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் எரிபொருட்களின் விலையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த கொரோனா ஊரடங்களிலும் விலை ஏற்றம் குறைந்த பாடில்லை. இதனால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற புதிய மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கையில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .

Published by
Castro Murugan

Recent Posts

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…

28 minutes ago

Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

58 minutes ago

மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!

சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…

2 hours ago

இன்று 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…

2 hours ago

சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…

3 hours ago