மாஸ்க் போடுங்க ! 5 பேர் மட்டும் உள்ளே வரவும் ! வந்துவிட்டது நவீன கதவு
ஸ்வீடனை சேர்ந்த அஸ்ஸா அப்லோய் (assa abloy) எனும் நிறுவனம், 5 பேரை மட்டும் உள்ளே அனுப்பும் வகையிலான ஆட்டோமடிக் கதவை உருவாக்கியுள்ளது.
உலகளவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க பல நாடுகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், உணவகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாற்றுகள் எழுந்து கொண்டே வருகின்றன.
இந்நிலையில், ஸ்வீடனில் தலைமையாக கொண்டு செயல்படும் அஸ்ஸா அப்லோய் (assa abloy) எனும் நிறுவனம், 5 பேரை மட்டும் உள்ளே அனுப்பும் வகையிலான ஆட்டோமடிக் கதவை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அஸ்ஸா அப்லோய் நிறுவனம் கூறுகையில், கதவு மூலம் 5 பேர் மட்டுமே கடைக்குள் வரமுடியும். கடை வாசலில் ஒரு திரை உண்டு. அதில் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்கள் என தெரியும். அதிலுள்ள சென்சார் மூலம் எத்தனை பேர் வருகிறார்கள் என பதிவாகி, அந்த திரையில் காட்டும்.
மேலும், ஐந்துபேருக்கு மேல் வந்தால் கதவுகள் திறக்காது. அதுமட்டுமின்றி, முகக்கவசம் அணியாமல் வந்தால், முகக்கவசம் அணிந்த பின் கதவுகள் திறக்கும் என தெரிவித்துள்ளது.
மனிதனின் இடத்தை ஆக்கிரமித்த தொழில்நுட்பம்.. 5 பேர் மட்டுமே நுழைய அனுமதி!#Viral | #ViralVideos | #coronavirus | #technology | #SocialDistancing pic.twitter.com/Z27t8ap6zz
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 8, 2020