சர்வதேச அளவில் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது அதன் 5ஜி கேலக்ஸி எஸ் 20 இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரிய நாட்டின் நிறுவனமான சாம்சங் நிறுவனம், சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் சர்வதேச சந்தையில் ஆப்பிள் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கையடக்க ஸ்மார்ட் போன், அதிக திறன் கொண்ட நான்கு கேமராக்களையும், சதுரமாக மடிக்கக்கூடிய கண்ணாடி திரைகளையும் கொண்டது. இதன் விலை இந்திய மதிப்பில் 98 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த மாடல், வரும் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி எஸ் 20 செல்போன்கள் ஊதா, தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக சாம்சங் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் வருகை சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…