பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளிய டிக்டாக்.. ஆய்வில் அதிசய தகவல்கள்..

Default Image
  • பேஸ்புக் செயலியை முந்தி முன்னேறிய டிக்டாக் செயலி.
  • ஆச்சரியமூட்டும் புதிய தகவல்கள்

தற்போதய  இணைய உலகில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். பல் முலைக்காத குழந்தை முதல் பல் இல்லாதாத தாத்தாவரை இணைய தளத்தை உபயோகிக்கின்றனர். இந்நிலையில் உலக அளவில் எந்த சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகிறோம் என்ற தகவல்களை பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், Sensor Tower வெளியிட்டுள்ள  அறிக்கையில்,உலக அளவில் முகநூளான பேஸ்புக் பயன்படுத்துவோரை விட அதிகமானவர்கள் பயன்படுத்தும் செயலியாக  சீன சமூகவலைதளமான டிக்டாக் இடம்பிடித்துள்ளது. இதுவரை 700 மில்லியன் பேர் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்து  பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இது இப்போது, உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஆப்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 850 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் வாட்ஸ்ஆப் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், முந்தைய ஆண்டை விட, 2019 ம் ஆண்டின் 4 வது காலாண்டில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், வாட்ஸ்ஆப்பிற்கு அடுத்தபடியாக அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்படும் செயலியாக  டிக்டாக் உள்ளது. இதிலும், பேஸ்புக், பேஸ்புக் மெசஜ்சர் ஆப்களை விட டிக்டாக் ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்