விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் அப்டேட்.!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று யாதும் ஊரே யாவரும் கேளிர்.எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன்,படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது விஜய் சேதுபதி ரசிகர்களைடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#YaadhumOoreYaavarumKelir teaser from tomorrow at 6pm.@ChandaraaArts @cineinnovations @roghanth @akash_megha @raguaditya_ @Actor_Vivek @jayam_mohanraja @nivaskprasanna @saregamasouth @onlynikil @CtcMediaboy pic.twitter.com/MjalwNt6XY
— VijaySethupathi (@VijaySethuOffl) March 3, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025