உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமல்ஹாசன் 232 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் 66வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக “கமல்ஹாசன் 232” படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
தற்போது “விக்ரம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் கமல் அவர்களின் கதாபாத்திரம் பயங்கரமாக உள்ளது . தற்போது அந்த படத்தின் டைட்டில் டீசர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், தீபாவளிக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பை தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…