நாளை வெளியாகிறது ரைட்டர் படத்தின் டீசர் …!
நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.
இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்திற்கான டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
#Writer ✍ Teaser from Tomorrow 7⃣PM on @thinkmusicindia#WriterFromDec24@thondankani @frankjacobbbb @doppratheep @editor_mani @officialneelam @GRfilmssg @PiiyushSingh @abhay_VMC @LRCF6204 @VMC_sg @Tisaditi , Jettyproductions , Vickram_jaunter , @govind_vasant pic.twitter.com/eszSEIVfWS
— pa.ranjith (@beemji) December 5, 2021