நடிகை நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகும் IPC376 திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
நந்திதா தனது சினிமா வாழ்க்கையை கன்னட படத்தின் மூலம் ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நந்திதா. அதன் பின்னர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் சமீபத்தில் வெளியான பல படங்கள் வெற்றியை பெறாததால் பட வாய்ப்புகள் குறைந்து வந்தது. எனவே அவர் மாடலிங் மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். மேலும் இவர் தற்போது சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
ராம்குமார் சுப்பராயன் எழுதி இயக்கும் IPC376 படத்தினை எஸ். பிரபாகர் தயாரிக்கிறார். யாதவ் ராமலிங்கம் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள IPC376 படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் நந்திதாவிற்கு புதிய திருப்பமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…