உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் – வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த நபர்!

Published by
Rebekal

உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் என தனது வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த 61 வயது நபர்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் பச்சை குத்துவது போன்ற நிகழ்வுகளும் முகத்தில் அணிகலன்களை குத்திக் கொள்வது என்பதெல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பச்சை குத்துவதும் முகத்தில் அணிகலன்கள் அணிவதை கூட வாழ்நாள் பொழுதுபோக்காக ஒருவர் வைத்துள்ளார் என்றால் பாருங்கள். ஜெர்மனியில் வசித்து வரக்கூடிய 61 வயதான  ரோல்ஃப் புச்சொல்ஸ் எனும் நபர் ஒருவர் தன்னை வித்தியாசமான தோற்றத்தில் காட்டிக் கொள்வதற்காக தனது உடல் முழுவதிலும் பச்சை குத்திக் கொண்டு காதுகள், உதடு, மூக்கு, நெற்றி, கண், இமைகள் என அனைத்திலும் அணிகலன்களை அணிந்து உள்ளார்.
மேலும் தனது கண்ணில் பச்சை குத்தியுள்ளார். இவர் தனது நெற்றியில் கொம்பு போன்ற ஒரு உள் அமைப்பு ஒன்றையும் ஆப்ரேஷன் மூலமாக வடிவமைத்துக் கொண்டுள்ளார். வித்தியாசமாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் தனது உடலில் இதுவரை 453 துளையிட்டு அணிகலன்களை அணிந்துள்ளார். மேலும், அவரது உடலில் 90% பச்சை குத்தப்பட்ட நிலையில் தான் உள்ளது. மேலும் அந்த நெற்றியில் உள்ள உள்வைப்பு சப்டெர்மல் என கூறப்படுகிறது. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான உடல் குத்தல்களை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்தவர்.
இருப்பினும் தொடர்ந்து அவர் தனது தனித்துவத்தை நிரூபிப்பதற்காக ஆங்காங்கு துளையிட்டு கொண்டே செல்கிறார். இவரது நாக்கு ஒரு முட்கரண்டி போல இருக்குமாம். அந்த அளவுக்கு இவரது நாக்கில் அணிகலன்களை குத்தியுள்ளார். இவர் மேலும் மணிக்கட்டை சுற்றி 6 சப்டெர்மல் எனும் உள்வைப்புகளை வைத்திருக்கிறாராம். அவரது கைகளில் காந்த உள்வைப்புகளை வைத்துள்ளாராம். இவரது வித்தியாசமான தோற்றத்துக்காக இவர் பல இடங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 61 வயது கொண்ட இவர் தனது நாற்பது வயது முதல் இந்த பச்சை குத்த கூடிய செயலை பொழுதுபோக்காக செய்து வருவதாக கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

3 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

3 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

5 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

7 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

7 hours ago