சுவையான கோழிக்கறி குழம்பு இவ்வாறு செய்து பாருங்கள்!
இறைச்சி என்றால் அனைவர்க்கும் பிடிக்கும், அதுவும், கோழி குழம்பு பிடிக்காதவர்கள் மிக சொற்பம் தான். ஆனால், இந்த கோழி குழம்பு முறையான பதத்தில் செய்தால் அட்டகாசமாக இருக்கும் அதிகளவு பொருள்கள் இல்லாமல் இது போல செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்
- கோழிக்கறி
- தக்காளி
- வெங்காயம்
- மிளகாய்
- கோழிக்கறி மசாலா
- எண்ணெய்
- உப்பு
- கடுகு
- கறிவேப்பில்ல்லை
- கொத்தமல்லி
செய்முறை
முதலில் கறியை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு கொள்ளவும். அதன் பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். லேசாக வதங்கியவுடன் சற்று உப்பு போட்டு கறியை அதனுள் போடவும்.
கறியை போட்ட பின்பு தண்ணி எதுவும் ஊற்றாமல், மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து பார்த்தல், கறியிலிருந்து நீர் வந்திருக்கும் அதில் மசாலாவை போட்டு கிளறி நம்மக்கு தேவையான அளவு நீர் ஊற்றி கறியை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான கோழி கறி தயார்.