வெயிலால் ஏற்படும் களைப்பை போக்க சுவையான பானகம்
- வெயிலால் ஏற்படும் களைப்பை போக்க சுவையான பானகம் செய்வது எப்படி?
நமது அன்றாட வாழ்வில் நாம் பலவகையான பானங்களை அருந்துகிறோம். ஆனால் இந்த பானங்கள் எல்லாம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்க்கையான பானைகளை அருந்துவதே மிக சிறந்தது.
செயற்கையான பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது. தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், நாம் அதிகமாக குளிர்பானங்களை தான் நாடுவோம். அந்த வகையில் பானகம் மிகவும், சுவையான இயற்கையான பணம் என்றே சொல்லலாம்.
நமது முன்னோர்கள் கோடைகாலத்தில் அவர்களுக்கு குளிர்ச்சியான பானமாக இருந்தது பானகம் தான். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. இந்த பானகம் லேசான புளிப்பு, இனிப்பு,காரம் என்று கலந்துகட்டிய சுவையில் இருக்கும்.
இந்த பானகத்தில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும், உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும்,இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் பனைவெல்லத்திலிருந்தும் கிடைக்கும்.
இந்த பணத்தை குடிப்பதன் மூலம் நமது உடலில் உள்ள பல நோய்கள் குணமாகிறது. இதனை குடிப்பதன் மூலம், உணவுக்கு குழாயில் ஏற்படும் தொற்றுக்களை, உணவு செரிமானத்தை அளிக்கிறது. இது உடலில் வெப்பத்தின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
தற்போது இந்த பதில் சுவையான பானகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
- பனைவெல்லம் அல்லது வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
- சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
- மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
செய்முறை
முதலில் வெல்லத்தை தட்டி பொடியாக்கிக் கொள்ள வேண்டும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைத்து,அந்த புளி தண்ணீரில் வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
மேலும், வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிட வேண்டும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் இதை வடிகட்டிகொள்ள வேண்டும். இதனுடன் ஏலக்காய் பொடி,சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்க வேண்டும். இப்பொது சுவையான பானகம் தயார்.
இந்த பானகத்தை கோடையில் நாம் குடித்து வந்தால், உடலில் எந்த நோய்களும் ஏற்படாமல், உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து கொள்வதற்கும் இது உதவுகிறது.