பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா விமான விபத்தில் உயிரிழந்தனர்.
கடந்த 1989 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி திரைப்படமான டார்சன் இன் மன்ஹாட்டனில் டார்சானாக நடிகர் ஜோ லாரா நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து 1996-1997 வரை டார்சன் தி எபிக் அட்வெஞ்சர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் ரூத்தர்ஃபோர்ட் பகுதியிலிருக்கும் மீட்புக் குழுவினர் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. மேலும், தற்போது யாரும் உயிரோடு இருப்பதாகத் தாங்கள் கருதவில்லை என்றும், உடைந்த விமான பாகங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடி வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…